Wednesday, September 26, 2018

Tamilnadu new syllabus first term 6th tamil 1st unit


ஆறாம் வகுப்பு தமிழ்(பருவம் 1)
இயல்—1
செய்யுள் – இன்பத்தமிழ்
ஆசிரியர் – பாரதிதாசன்
இயற்பெயர் – சுப்புரத்தினம்
சிறப்பு பெயர்கள் – புரட்சிக்கவி, பாவேந்தர்
தமிழுக்கு அமுதென்று பேர் என்று பாடியவர் – பாரதிதாசன்
பாரதிதாசன் கவிதை பாடு பொருட்கள் – பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு

சொற்பொருள்
நிருமித்த – உருவாக்கிய
அசதி – சோர்வு
சமூகம் – மக்கள் குழு
விளைவு – விளைச்சல்

தமிழே உயிரே வணக்கம்
தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் --- என்று பாடியவர் கவிஞர் காசி ஆனந்தன்

சேர்த்து எழுதுக
நிலவு + என்று – நிலவென்று
தமிழ் + எங்கள் – தமிழெங்கள்

பிரித்து எழுதுக
அமுதென்று – அமுது + என்று
செம்பயிர் – செம்மை + பயிர்

இன்பத்தமிழ் பாடலின்படி தமிழ்
விளைவுக்கு – நீர்
அறிவுக்கு – தோள்
இளமைக்கு – பால்
புலவர்க்கு -- வேல்

செய்யுள் – தமிழ்க்கும்மி
ஆசிரியர் – பெருஞ்சித்திரனார்
இயற் பெயர் – மாணிக்கம்
சிறப்பு பெயர்கள் – பாவலரேறு
இயற்றிய நூல்கள் – கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம்
நடத்திய இதழ்கள் – தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்
கனிச்சாறு எட்டுத் தொகுதிகளாக வந்த நூல் தமிழுணர்வு நிரம்பிய பாடல்கள் கொண்டது.

சொற்பொருள்
ஆழிப்பெருக்கு – கடல்கோள்
மேதினி – உலகம்
ஊழி --  நீண்டதொரு கால்ப் பகுதி
உள்ளப் பூட்டு –அறிய விரும்பாமை

பிரித்து எழுதுக
செந்தமிழ் – செம்மை + தமிழ்
பொய்யகற்றும் – பொய் + அகற்றும்

சேர்த்து எழுக
பாட்டு + இருக்கும் – பாட்டிருக்கும்
எட்டு + திசை –எட்டுத்திசை

உரைநடை – வளர்தமிழ்
உலகிழுள்ள மொழிகளின் எண்ணிக்கை ஆறாயிர்த்திற்கு மேல்
தமிழ் மொழி ஒரு செம்மொழி
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்”
        என்று பாடியவர் பாரதியார்
“என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்”
   என்று பாடியவர் பாரதியார்.
தமிழில் கிடைத்துள்ள நூல்களுள் மிகப்பழமையன நூல் தொல்கப்பியம்
தமிழ் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்ப்ட்ட இலக்கியம் தொல்கப்பியம்
மேற்கோள்  -- “தமிழென் கிளவியும் அதனோரற்ற”
தமிழ்நாடு என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இலக்கியம் சில்ப்பதிகாரம்( வஞ்சிக்காண்டம்)
மேற்கோள் – “இமில்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
                            இதுநீ கருணை ஆயின்”
தமிழன் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இலக்கியம் அப்பர்  தேவாரம்
தொல்காப்பியம், நன்னூல் – இலக்கண நூல்கள்
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு – சங்க இலக்கியங்கள்
திருக்குறள், நாலடியார் – அறநூல்கள்
சிலப்பதிகாரம், மணிமேகலை – காப்பியங்கள்
பூவின் நிலைகள் ஏழு
“மா” என்னும் சொல்லின் பொருள் மடரம், விலங்கு, பெரிய, திருமகள், அழ்கு, அறிவு, அளவு, அழைத்தல், துக்ள், மேன்மை, வயல்,வண்டு.
தமிழின் சிறப்புப் பெயர் – முத்தமிழ்
இயல் தமிழ் – எண்ணத்தை வெளிப்படுத்தும்
இசைத்தமிழ் – உள்ளத்தை மகிழ்விக்கும்
நாடகத்தமிழ் – உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்
தமிழ் கவிதை வடிவங்கள் – துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்
உரைநடை வடிவங்கள் – கட்டுரை, புதினம், சிருகதை
1—௧, 2—௨, 3—௩, 4—௪, 5—௫, 6—௬, 7—௭, 8—௮, 9—௯, 10--௧௦

இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் தமிழ்ச்சொற்கள்
சொல்                                    இடம்பெற்ற நூல்                                                                             
1.        வேளாண்மை            --       கலித்தொகை 101, திருக்குறள் 81
2.        உழவர்                         --       நற்றிணை 4
3.        பாம்பு                           --       குறுந்தொகை --239
4.        வெள்ளம்                     --    பதிற்றுப்பத்து—15
5.        முதலை                         --    குறுந்தொகை -- 324
6.        கோடை                       --      அகநானூறு -- 42
7.        உலகம்                          --      தொல்காப்பியம், கிளவியாக்கம்—56, திருமுருகாற்றுப்படை--1
8.        மருந்து                           --     அகநானூறு-- 147
9.        ஊர்                                 --      தொல்காப்பியம், அகத்திணையியல்-- 41
10.     அன்பு                            --       தொல்காப்பியம், களவியல்-- 110
11.     உயிர்                             --        தொல்காப்பியம, கிளவியாக்கம் -- 56
12.     மகிழ்ச்சி                      --         தொல்காப்பியம்,கற்பியல் – 142, திருக்குறள்
13.     மீன்                                --        குறுந்தொகை -- 54
14.     புகழ்                              --       தொல்காப்பியம், வேற்றுமையியல் -- 71
15.     அரசு                              --         திருக்குறள் -- 554
16.     செய்                              --         குறுந்தொகை -- 72
17.     செல்                       --          தொல்காப்பியம் – 75 ( புறத்திணையியல்)
18.     பார்                         --           பெரும்பாணாற்றுப்படை -- 435
19.     ஒழி                         --           தொல்காப்பியம், கிளவியாக்கம் -- 48
20.     முடி                        --            தொல்காப்பியம், வினையியல் – 206

 சேர்த்து எழுக
சிலம்பு+ அதிகாரம் – சிலப்பதிகாரம்
கணினி+ தமிழ்  ---  கணினித்தமிழ்
பிரித்து எழுதுக
இடப்புறம் – இடது + புறம்
சீரிளமை --  சீர் + இளமை

கனவு பலித்தது( கடிதம்)
நிலம்,நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது உலகம் என்று கூறியவர் தொல்காப்பியர்
“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
 கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” -- தொல்காப்பியம்

கடல் நீர் ஆஅவியாகி மேகமாகி பின் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது  என்ற அறிவியல் செய்தியை குறிப்பிடும் பழந்தமிழ் இலக்கியங்கள் – முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறல், கார்நாற்பது, திருப்பாவை.
கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி….. -- கார்நாற்பது
திரவப் பொருளை எவ்வளவு அழுத்தினாலும் அதன் அளவை சுருக்க நுடியாது என்ற அறிவியல் உண்மையை  தன் பாடலில் கூரியவர் – ஔவையார்
“ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
  நாழி முகவாது நால் நாழி “

போர்க்கலத்தில் காயம்பட்ட வீரரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
“நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” – பதிற்றுப்பத்து

சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தியை கூறும் நூல் – நற்றிணை
“கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய
  நரம்பின் முடிமுதிர் பரதவர்” --  நற்றிணை

தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்று நிருவியவர் – கலிலியோ. இந்த உண்மை இடம் பெற்றுள்ள நூல் – கபிலர் எழுதிய திருவள்ளுவமாலை
“தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
   பனையளவு காட்டும்”    --- கபிலர் ( திருவள்ளுவமாலை)

தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்
மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம்
இஸ்ரோ அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை
இஸ்ரோவின் தலைவர் சிவன்.

தமிழ் எழுத்துக்களின் வகை தொகை
தமிழ் மொழியின் இலக்கணம் வகைகள் ஐந்து அவை
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரி வடிவாக எழுதப்படுவதும் எழுத்து
உயிர் எழுத்துகள் 12
அ, இ, உ, எ, ஒ – குறில் எழுத்துகள்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ – நெடில் எழுத்துகள்
மெய் எழுத்துகள் – 18
ங், ஞ், ண், ந், ம், ன் – மெல்லினம்
க், ச், ட், த், ப், ற் – வல்லினம்
ய், ர், ல், வ், ழ், ள் – இடையினம்
ஒரு மாத்திரை – ஒரு முறை கண் இமைக்கவோ ஒரு முறை கைநொடிக்கவோ ஆகும் கால் அளவு.
குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு – 1 மாத்திரை
நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு  -- 2 மாத்திரை
மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு – ½ மாத்திரை
ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு – ½ மாத்திரை

மேலே உள்ள குறிப்பு களின் pdf  link

Sunday, September 16, 2018

How to type tamil letters in android in easy way using google handwriting input? in tamil


Step 1: play Store ல் இருந்து google hand Writing input ஐ டவுன்லோடு செய்யவும்

Step 2: google hand Writing app ஐ  open செய்து google hand Writing ஐ enable செய்யவும

Step 3: Back வரவும் Configure languages என்பதை Open செய்து use system language என்பதை off செய்யவும்.

Step 4: கீழே வந்து "தமிழ் இந்தியா" என்பதை ஆன் செய்யவும்.

Step 5: Back வந்து download languages என்பதை தட்டவும்.

Step 6 : Download ஆகி முடிந்ததும் நமது மொபைல் தமிழில் எழுத தயாராகி விட்டது.

Step 7: தேவையான App ஐ open செய்து Keyboard வந்ததும் Space bar (இடைவெளி விட அழுத்தும் பட்டன்) ஐ அழுத்தி google hand Writing தமிழ் என்பதை தேர்ந்தெடுக்கவும்.

Stept 8: இப்பொழுது சாம்பல் நிற இடம் கிடைக்கும் அதில் பேனாவால் எழுதுவது போல எழுதினால் எழுதியது டைப் ஆகும்.
Step 9: மீண்டும் பழைய Keyboard க்குத் திரும்ப Space bar ஐ அழுத்தி பழைய keyboard ஐ தேர்ந்தெடுக்கவும்.
                            
                                 நன்றி

Tamilnadu 6th Std Sience new book notes for TNPSC and TET


















மேற்கண்ட image களின் pdf ன் லிங்க் கீழே
https://drive.google.com/file/d/1rFpx3JRt7KGL1IocHmJrPdfjCFQ7l2Lk/view?usp=drivesdk